மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4¾ லட்சம் பெற்று மோசடி செய்த டிரஸ்ட் உரிமையாளர் கைது


மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4¾ லட்சம் பெற்று மோசடி செய்த டிரஸ்ட் உரிமையாளர் கைது
x

மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4¾ லட்சம் பெற்று மோசடி செய்த டிரஸ்ட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

மருத்துவம் படிக்க

கரூர் அருகே உள்ள நரிகட்டியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பேபி சித்ரா (வயது 60). இவரது மகள் ரசிகா. இவர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் மதுரையில் கெசிட் எஜுகேசன் டிரஸ்ட் என்ற பெயரில் கல்வி நிறுவன டிரஸ்ட் நடத்திவரும் ரகுநாத பாண்டியன் என்பவரின் அலுவலகத்தில் இருந்த, காயத்ரி என்ற பெண் பேபி சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது, மருத்துவ படிப்பில் ரசிகாவை சேர்க்குமாறு கூறியதுடன் வங்காளதேசத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க ரசிகாவை சேர்ப்பது தொடர்பாக அங்கீகார கடிதத்தையும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.

கைது

பின்னர் ரகுநாத பாண்டியன் மின்னஞ்சல் மூலம் அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்நிலையில் அவரது டிரஸ்டில் இருந்து பேபி சித்ராவை தொடர்பு கொண்ட ரகுநாத பாண்டியன், ரசிகாவின் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.மேலும், பேபி சித்ராவின் கணவர், ரகுநாத பாண்டியனின் வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு ரகுநாத பாண்டியனை தொடர்பு கொண்டபோது எவ்வித பதிலும் இல்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பேபி சித்ரா கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் ரகுநாத பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story