நம்பியாற்றில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: நடத்தை சந்தேகத்தால் மனைவியை கணவரே தீர்த்துக்கட்டியது அம்பலம்
நாங்குநேரி அருகே நம்பியாற்றில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பமாக நடத்தை சந்தேகத்தில் அவரை, அவரது கணவரே கழுத்தை நெரித்து தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே நம்பியாற்றில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பமாக நடத்தை சந்தேகத்தில் அவரை, அவரது கணவரே கழுத்தை நெரித்து தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
காதல் திருமணம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன் (வயது 40). மதுரையில் கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி (34). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து ஊருக்கு சுடலைக்கண்ணு வந்தார். பின்னர் கணவன்-மனைவி நாங்குநேரி அருகே உள்ள துலுக்கர்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்கள்.
ஆற்றில் பிணம்
கடந்த 16-ந் தேதி இரவில் சுடலைக்கண்ணு தனது மனைவி ஈஸ்வரியை அங்குள்ள நம்பியாற்றின் பகுதிக்கு அழைத்து சென்றார். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை.
நேற்று முன்தினம் நம்பியாற்றில் ஈஸ்வரி பிணமாக கிடந்தார். சுடலைக்கண்ணு மாயமாகி இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஈஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கழுத்தை நெரித்துக் கொலை
இந்த நிலையில் தலைமறைவான சுடலைக்கண்ணுவை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அதாவது சுடலைக்கண்ணு தனது மனைவி ஈஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கடந்த 16-ந் தேதி ஈஸ்வரியை பேசுதற்காக நம்பியாற்று பகுதிக்கு சுடலைக்கண்ணு அழைத்து சென்றார். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுடலைக்கண்ணு தனது மனைவி என்றும் பாராமல் ஈஸ்வரிைய கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, உடலை ஆற்றில் வீசிச்சென்றது ெதரியவந்தது.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கணவர் கைது
இதையடுத்து மர்மசாவு வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, சுடலைக்கண்ணுவை கைது செய்தனர்.
நாங்குநேரி அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை அவரது கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.