மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் பலியானார்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சுந்தரராஜன் என்ற சுரேஷ் (வயது 24). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேரன்மாதேவிக்கு வந்து விட்டு, பாளையங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். சேரன்மாதேவியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த வேன், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story