மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
x

நாகூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேன் மோதியது

நாகையை அடுத்த கீச்சாகுப்பம் சேவபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவபதி (வயது 28). அதே பகுதியை சேர்ந்த அப்பாராசு மகன் பிரபாகரன் (28). தெற்குதெருவை சேர்ந்த வாளையன் மகன் செல்வம் (35). நண்பர்களான இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் நாகூரில் இருந்து நாகையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ேமாட்டார் ைசக்கிளை சிவபதி ஓட்டி சென்றார். நாகூர்-நாகை மெயின் சாலையில் சென்ற போது எதிரேவந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சிவபதி, பிரபாகரன், செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிவபதி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரபாகரன் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story