காய்கறிக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது


காய்கறிக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் போலீஸ் நிலையம் முன் காய்கறிக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது

தென்காசி

தென்காசி அருகே உள்ள மேலகரத்தில் ஒரு காய்கறி கடையில் வேலை பார்ப்பவர் மணிமாறன்.

இவர் குற்றாலம் போலீஸ் நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஒரு திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் காய்கறிகள் கொண்டு வந்திருந்தார். மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு காய்கறிகளை எடுத்துக்கொண்டு திருமணம் நடைபெற்ற இடத்திற்கு சென்றார்.

திரும்பி வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து புகை வந்தது. திடீரென என்ஜினின் கீழே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அங்கு இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ எப்படி பிடித்தது? என்று தெரியவில்லை.

சிறிது நேரத்தில் தீ அணைந்ததும் மணிமாறன் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து உருட்டிக்கொண்டு சென்றார். அந்த நேரத்தில் அந்த வழியாக தென்காசி மாவட்ட கலெக்டரின் கார் வந்தது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் போலீசார் உடனே போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story