மாற்றுத் திறனாளி குழந்தைகளுகளின் இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் வாகனம்
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் வாகனத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக நடமாடும் சிகிச்சை வாகனம் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தினை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாற்றுத் திறனாளி நல அலுவலர் சரவணகுமார். நகரமன்ற உறுப்பினர் வினோத், டாக்டர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.