பயங்கர விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது


பயங்கர விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
x

நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த பயங்கர விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த பயங்கர விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த பூசாரியூர் கிராமத்தில் வசித்து வரும் வசந்தன் என்பவரின் வீட்டில் பயங்கர விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று தேடுதலில் ஈடுபட்டு பாம்பை கருவி மூலம் பிடித்தனர். 3 அடி நீளமுள்ள அந்த கண்ணாடி விரியன் பாம்பை அவர்கள் மீட்டு திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.


Next Story