கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்


கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்
x

கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


அரக்கோணம் தாலுகா மோசூர் கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனினும், கால்நடை மருத்துவர் நியமிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கால்நடைகளை அரக்கோணத்துக்கு ஓட்டிச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அதிக பொருட்செலவு, கால விரையம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் விரைவில் ஒரு கால்நடை மருத்துவரை நியமித்து, தற்போது பூட்டிக்கிடக்கும் கால்நடை மருந்தகத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனபொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story