காத்திருப்பு போராட்டம்


காத்திருப்பு போராட்டம்
x

காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேரம் காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொருளாளர் துரைசாமி தொடங்கி வைத்தார்.

இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி விளக்க உரையாற்றினார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.


Next Story