காத்திருப்பு போராட்டம்


காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட கிளை தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறையினர் நேற்று காலை அலுவலகத்தில் கையொப்பம் இட்ட பின்னர் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றிய கள்ளக்குறிச்சி வட்டாட்சியரை தற்காலிக பணி நீக்கம் செய்த கலெக்டரை கண்டித்தும், பெண் அரசு ஊழியர்களை ஒருமையில் பேசிய ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற 5 மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களை கைது செய்த போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் வருவாய் துறை அலுவலர் சங்க துணை தலைவர் ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் கார்த்திக் கண்ணன், பொருளாளர் சிதம்பரம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை சங்க சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் சிங்கமுத்து தலைமை தாங்கினார். தாசில்தார் சடையாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சாந்தி, வட்டார செயலாளர் தினேஷ் பாபு முன்னிலை வகித்தனர். இதில் தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள், அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story