மரத்தில் பழம் பறித்த காவலாளி தவறி விழுந்து சாவு


மரத்தில் பழம் பறித்த காவலாளி தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே ஏணியில் நின்றபடி மரத்தில் பழம் பறித்த போது ஏணியோடு சரிந்து விழுந்த காவலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே ஏணியில் நின்றபடி மரத்தில் பழம் பறித்த போது ஏணியோடு சரிந்து விழுந்த காவலாளி பரிதாபமாக இறந்தார்.

விடுதி காவலாளி

மார்த்தாண்டம் அருகே உள்ள தேன்பிறைவிளையை சேர்ந்தவர் ரோட்ரிக்ஸ் (வயது 42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மார்த்தாண்டத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

செல்வராஜுக்கு ஓலத்தான்விளையில் சொந்தமாக ரம்புட்டான் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து ரம்புட்டான் பழம் பறிக்க நேற்று முன்தினம் ரோட்ரிக்ஸ் சென்றார். அவர் மரத்தில் ஏணி வைத்து ரம்புட்டான் பழம் பறித்து கொண்டு இருந்த போது திடீரென ஏணி சரிந்து கீழே விழுந்தது. இதில் ரோட்ரிக்ஸ் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் சப்- இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மரத்தில் இருந்து ரம்புட்டான் பழம் பறித்தபோது ஏணி சரிந்து விழுந்து காவலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story