தனியார் நிறுவன ஊழியரை முட்டித்தள்ளிய காட்டுப்பன்றி


தனியார் நிறுவன ஊழியரை முட்டித்தள்ளிய காட்டுப்பன்றி
x
தினத்தந்தி 2 Jun 2023 1:00 AM IST (Updated: 2 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில், மகன் கண் எதிரே தனியார் நிறுவன ஊழியரை காட்டுப்பன்றி முட்டி தள்ளியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில், மகன் கண் எதிரே தனியார் நிறுவன ஊழியரை காட்டுப்பன்றி முட்டி தள்ளியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

காட்டுப்பன்றிகள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூடலூர்-கோழிக்கோடு செல்லும் சாலையில் வழக்கம்போல் வாகன போக்கவரத்து அதிகமாக இருந்தது. மேலும் சாலையோரம் பொதுமக்களும் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அங்குள்ள செம்பாலா பகுதிக்குள் குட்டிகளுடன் காட்டுப்பன்றிகள் நுழைந்தன. ஆனால் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்ததால், சாலையை கடந்து செல்ல முடியவில்லை. இதனால் செல்லும் வழி தெரியாமல் திணறியவாறு குட்டிகளுடன் காட்டுப்பன்றிகள் அலைமோதின.

முட்டித்தள்ளியது

எனினும் குட்டிகளுடன் நடுரோட்டில் காட்டுப்பன்றிகள் ஓடின. ஆனால் எதிரே வாகனங்கள் வந்ததால் காட்டுப்பன்றிகள் பயந்து, வந்த வழியாக திரும்பி ஓடி வந்தன.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தனது மகனுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு காட்டுப்பன்றி அவரது மகன் கண் எதிரே முட்டித்தள்ளிவிட்டு ஓடியது.

இதில் அவர் கீழே விழுந்தார். மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரையும் காட்டுப்பன்றிகள் முட்டி தள்ளின. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story