தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்சோளப்பயிர் நாசம்


தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்சோளப்பயிர் நாசம்
x

தாளவாடியில் தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்ததில் சோளப்பயிர் நாசமானது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்ததில் சோளப்பயிர் நாசமானது.

காட்டு யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. அங்குள்ள யானைகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகே உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன.

மேலும் தோட்டங்களில் நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை தாளவாடியில் உள்ள ரமேஷ் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் சோளப்பயிர்களை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது.

அச்சம்

தோட்டத்து வீட்டில் இருந்த ரமேஷ் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார். அப்போது யானை பயிர்களை நாசம் செய்வதை கண்டு உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கும், தாளவாடி வனத்துறைக்கும் செல்போனில் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். ஆனால் யானை செல்லாமல் இரவு 11 மணி வரை ரமேஷின் தோட்டத்திலேயே இருந்தது. அதன்பின்னர் அங்கிருந்து சேகர் என்பவருடைய தோட்டத்துக்கும், பின்னர் மோகன் என்பவருடைய தோட்டத்துக்கும் சென்று பயிர்களை நாசம் செய்தது. பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் வனப்பகுதிக்குள் தானாக சென்றது. தாளவாடி ஊருக்குள்ளேயே காட்டு யானை வரத்தொடங்கிவிட்டதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.


Next Story