காரை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு


காரை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானை ஆக்ரோஷமாக காரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானை ஆக்ரோஷமாக காரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானைகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவைக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது கெத்தை பகுதியில் குட்டியுடன் கூடிய காட் யானைகள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி, யானைகள் சாலையை கடந்து செல்லும் வரை காத்திருந்தனர். அப்போது யானைகள் வாகனங்களை வழிமறித்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணம் செய்தவர்கள் அச்சமடைந்தனர்.

காரை துரத்தியது

அதன் பின்னர் யானைகள் சாலையோரம் நின்ற போது, வேகமாக சென்று விடலாம் என்று வாகன ஓட்டி காரை இயக்கினார். அப்போது ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை ஒன்று பிளிறியவாறு காரை நோக்கி வேகமாக ஓடி சென்று துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக காரை பின்னோக்கி இயக்கி தப்பித்தார். இதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், சாலையோரத்தில் தப்பி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடி உள்ளது. இதன் அருகே தேசிய நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான பாலம் உள்ளது. குட்டியுடன் கூடிய காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றது. பின்னர் போக்குவரத்து சீரானது.


Next Story