பாக்கு மரங்களை சாய்த்த காட்டு யானை


பாக்கு மரங்களை சாய்த்த காட்டு யானை
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே மின் கம்பிகள் மீது பாக்கு மரங்களை காட்டு யானை சாய்த்தது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதால், கிராமங்கள் இருளில் மூழ்கின.

நீலகிரி

கூடலூர்,

தேவர்சோலை அருகே மின் கம்பிகள் மீது பாக்கு மரங்களை காட்டு யானை சாய்த்தது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதால், கிராமங்கள் இருளில் மூழ்கின.

காட்டு யானை

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேவர்சோலை அருகே செருமுள்ளி, பன்னிமூலா சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் வீச்சனக்கொல்லி, வட்டிக்கொல்லி, செட்டியங்காடி உள்ளிட்ட பகுதிகளுக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து வீச்சனக்கொல்லி, வட்டிக்கொல்லி பகுதியில் பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை தின்று சேதப்படுத்தியது.

மின்கம்பிகள் மீது சாய்த்தது

அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பிகள் மீது பாக்கு மரங்களை காட்டு யானை சரித்து போட்டது. இதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதை யடுத்து கிராமங்கள் இருளில் மூழ்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாலை வரை அப்பகுதியில் காட்டு யானை நின்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானையால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று அப்பகுதிக்கு வந்து மின் கம்பிகளை சீரமைத்தனர். இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறும்போது, காட்டு யானையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள் சூரிய மின்சக்தி வேலிகள் அமைத்து வருகின்றனர். ஆனால், கடன் வாங்கி விவசாயம் மேற்கொள்ளும் சிறு விவசாயிகள் காட்டு யானையால் பாதிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. வனத்துறையினர் நேரில் வந்து விரட்டினாலும் தீர்வு கிடைப்பது இல்லை என்றனர்.


Next Story