8 ஆயிரம் நாற்றுகளை சேதப்படுத்திய காட்டு யானை


8 ஆயிரம் நாற்றுகளை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே அரசு தோட்டக்கலைப் பண்ணைக்குள் குட்டியுடன் காட்டு யானை புகுந்து 8 ஆயிரம் நாற்றுகளை சேதப்படுத்தியது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே அரசு தோட்டக்கலைப் பண்ணைக்குள் குட்டியுடன் காட்டு யானை புகுந்து 8 ஆயிரம் நாற்றுகளை சேதப்படுத்தியது.

8 ஆயிரம் நாற்றுகள் சேதம்

கூடலூர் அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமாக நாடுகாணி பொன்னூரில் பண்ணை உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான காபி, குறுமிளகு உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், தினமும் வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதேபோல் தோட்டக்கலை பண்ணைக்குள் காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் காட்டு யானை பண்ணைக்குள் புகுந்தது. அங்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பட்டர் புரூட் உள்ளிட்ட நாற்றுகளை மிதித்து நாசம் செய்தது. இதில் 8 ஆயிரம் நாற்றுகள் சேதமடைந்து வீணானது.

காட்டு யானை

இதுகுறித்து தகவல் அறிந்த தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் காட்டு யானை சேதப்படுத்திய நாற்றுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து பண்ணைக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

இதனிடையே காட்டு யானைகள் பண்ணைக்குள் புகுந்து வருவதால், பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். இதேபோல் நாடுகாணி, பொன்னூர் பகுதி கிராம மக்கள் கூறும்போது, கிராமங்களை சுற்றி அகழிகள் தோண்ட வேண்டும். ஏற்கனவே உள்ள அகழிகள் தொடர் மழையால் மண்மூடி காணப்படுகிறது. இதனை ஆழப்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story