கூடலூர்- ஓவேலி சாலையில் உலா வந்த காட்டு யானை


கூடலூர்- ஓவேலி சாலையில் உலா வந்த காட்டு யானை
x

கூடலூர்- ஓவேலி சாலையில் உலா வந்த காட்டு யானை

நீலகிரி

கூடலூர், ஜூன்.8-

கூடலூர் பகுதியில் பலாப்பழ சீசன் களைகட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து சில இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா ராக்லேண்ட் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.


தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மரத்தில் விளைந்திருந்த பலா காய்களை பறித்து தின்றது. இந்த சமயத்தில் இரவு பணியில் இருந்த போலீசார், வனத்துறையினர் பீதி அடைந்தனர். பின்னர் சாலையில் நடந்தவாறு காட்டு யானை அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்றது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை கவனமுடன் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.


Next Story