தேன்கனிக்கோட்டையில் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை
தேன்கனிக்கோட்டையில் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை நேற்று மாலை அய்யூர் கிராமம் அருகே சாலையில் சுற்றித்திரிந்தது. அந்த சாலையில் சென்ற அரசு பஸ் மற்றும் வாகனங்களை மறித்து சாலையில் நடந்து சென்றது. வாகன ஓட்டிகள் இருபுறமும் செல்ல முடியாமல் தவித்தனர்.
அங்கிருந்த விவசாயிகள் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை சாலையில் நிறுத்தினர். பின்னர் அந்த யானையே தானாக விவசாய நிலங்கள் வழியாகவனப்பகுதிக்குள் சென்று விட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story