குட்டியோடு சாலை ஓரம் நின்ற காட்டு யானை - அச்சத்தில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்


குட்டியோடு சாலை ஓரம் நின்ற காட்டு யானை - அச்சத்தில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
x

நீலகிரியில் குட்டியோடு சாலை ஓரம் நின்ற காட்டு யானையால், வாகனங்கள் சாலையில் அணிவகுத்தவாறு மெதுவாக ஊர்ந்து சென்றன.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காட்டு யானை குட்டியுடன் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், குஞ்சபனை அருகே குட்டியுடன் யானை சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால், வாகனங்கள் சாலையில் அணிவகுத்தவாறு மெதுவாக ஊர்ந்து சென்றன.


Next Story