கொடைக்கானல் மலைக்கிராமத்தில் உலா வந்த காட்டு யானை


கொடைக்கானல் மலைக்கிராமத்தில் உலா வந்த காட்டு யானை
x
தினத்தந்தி 28 Jun 2023 2:45 AM IST (Updated: 28 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைக்கிராமத்தில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைக்கிராமத்தில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

காட்டு யானை முகாம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து, நகர் மற்றும் கிராமங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து உலா வருவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக கூட்டம் கூட்டமாக வலம் வந்து காட்டெருமைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

சமீபகாலமாக, காட்டு யானைகளும் மலைக்கிராமங்களுக்குள் நுழைந்து மக்களை பீதி அடைய செய்துள்ளது. இவை, விளை நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து பொதுமக்களை பீதி அடைய செய்து வருகின்றன.

பகலில் கம்பீர பவனி

இந்தநிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில், கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இது, அங்குள்ள குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக உலா வந்து கொண்டிருக்கிறது.

பகல் வேளையிலும், சர்வ சாதாரணமாக பவனி வருகிற இந்த யானை குடியிருப்புவாசிகளை பயமுறுத்தி வருகின்றன. மேலும் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர்.

பேத்துப்பாறை பகுதியில் நேற்று மாலை சாலையில் கம்பீரமாக அந்த யானை உலா வந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர். பின்னர் அங்கு முகாமிட்டிருந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகழி வெட்ட வேண்டும்

இதுகுறித்து பேத்துப்பாறை மலைக்கிராம மக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பு அதனை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் அகழி வெட்டி யானைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்றனர்.


Next Story