கோவையில் பூட்டிய கேட்டை தாண்டி வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டுயானை


கோவையில் பூட்டிய கேட்டை தாண்டி வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டுயானை
x

கோவை அருகே ஒரு வீட்டினுள், ஒற்றை காட்டு யானை நுழைய முயலும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை,

கோவை மாவட்டம், சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பன்னிமடை அருகே உள்ள ஒரு வீட்டிற்குள், ஒற்றை காட்டு யானை ஒன்று நுழைய முற்பட்டது.

யானை வீட்டின் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்த உயரமான கேட்டை தாண்டி வீட்டினுள் நுழைய முயல்வதை அந்த வீட்டில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story