தனது வயிற்றில் உருவான கருவை மாத்திரை தின்று கலைத்த பெண்


தனது வயிற்றில் உருவான கருவை மாத்திரை தின்று கலைத்த பெண்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே தனது வயிற்றில் உருவான கருவை மாத்திரை தின்று கலைத்த பெண் போலீசார் விசாரணை

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி சரஸ்வதி(வயது 27). இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த சரஸ்வதி டாக்டர்களின் ஆலோசனை இன்றி கருக்கலைப்பு மாத்திரை வாங்கி தின்றதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சரஸ்வதியை பரிசோதனை செய்தபோது வயிற்றில் இருந்த சிசு இறந்தது தெரியவந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்து இறந்த சிசுவை எடுத்து அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். பின்னர் சிசுவின் உடலை உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று புதைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story