கணவர் இறந்த சோகத்தில் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை


கணவர் இறந்த சோகத்தில் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை
x

கணவர் இறந்த சோகத்தில் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்

மதுரை


மதுரை வண்டியூர் சுந்தர் நகரை சேர்ந்தவர் சினேகா(வயது 35). இவரது கணவர் சீனிவாசன் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். மேலும் அவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் மனம் உடைந்த சினேகா, மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story