சமையல் செய்த போது ஆடையில் தீப்பிடித்து பெண் பலி
சமையல் செய்த போது ஆடையில் தீப்பிடித்து பெண் பலி
கன்னியாகுமரி
ராஜாக்கமங்கலம்:
முட்டம் ஓடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் புருனோ, கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மரியரோஸ் (வயது57). இவர் சம்பவத்தன்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்து உடல் முழுவதும் பரவியது. உடனே அவர் அலறி அடித்துக் கொண்டு சமையல் அறையை விட்டு வெளியே ஓடினார். அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த கணவர் புருனோ அவரை மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மரியரோஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை போலீசார், பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story