சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் பலி


சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் பலி
x

தூசி அருகே சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் என்பவரின் மனைவி காமாட்சி (வயது 58).

இவர் நேற்று வழக்கம் போல் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த விறகு கட்டை மீது அவரது சேலை பட்டு தீப்பிடித்தது.

இதில் சேலை முழுவதும் எரிந்து, அவரது உடலிலும் தீப்பிடித்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காமாட்சியின் மகன் சாந்தகுமார் தூசி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story