மதுரை அருகே கண்மாயில் மூழ்கி பெண்-சிறுமி பலி - குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற இடத்தில் பரிதாபம்


மதுரை அருகே கண்மாயில் மூழ்கி பெண்-சிறுமி பலி - குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற இடத்தில் பரிதாபம்
x

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர்.

மதுரை


மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர்.

கோவிலுக்கு சென்றனர்

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருடைய மனைவி பவானிசித்ரா(வயது 50).

அதே பகுதியை சேர்ந்தவர் கேசவுக பெருமாள். இவருடைய மகள் தனுஷ்கா (11). இவள், காமராஜர் சாலை பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த இரு குடும்பத்தினரும் உறவினர்கள் ஆவார்கள்.

இந்தநிலையில், நேற்று குடியரசு தின விடுமுறை என்பதால் இவர்கள் குடும்பத்துடன் குல தெய்வ தரிசனத்திற்காக சென்றனர். அதன்படி, குடும்ப உறுப்பினர்கள் 15 பேர், மதுரை அருகே வரிச்சியூரில் உள்ள மரகத கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தனர்.

கண்மாயில்....

அங்கு கோவில் அருகே உள்ள குன்னத்தூர் கண்மாயில் சிறுமி தனுஷ்கா யாரிடமும் சொல்லாமல் குளிக்க சென்றாள். அப்போது அவள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கி கொண்டாள். இதனை கண்ட சிறுமியின் பெரியம்மா பவானிசித்ரா சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் நீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை கண்ட குடும்ப உறுப்பினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கருப்பாயூரணி போலீசார், சிறுமி மற்றும் பவானி சித்ரா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு சென்ற இடத்தில் சிறுமியும், அவரது உறவினரும் உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story