ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
தக்கலை:
தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
ஓட்டுனர் பயிற்சி நிலைய பெண்
தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கைவிளை பகுதியை சேர்ந்த இஸ்ரவேல் என்பவரின் மகள் ஹெலன் மேரி பிரேமா (வயது40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் தக்கலையில் உள்ள ஒரு ஓட்டுனர் பயிற்சி நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்கான தினமும் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வேலைக்கு செல்வது வழக்கம்.
2 பவுன் நகை பறிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். குழிக்கோடு-பள்ளியாடி சாலையில் வட்டவிளை பகுதியில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் ஸ்கூட்டர் முன்னோக்கி செல்ல முடியாத வகையில் பக்கவாட்டில் நெருங்கி வந்தனர். அப்போது, அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் திடீரென ஹெலன்மேரி பிரேமாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஹெலன்மேரி பிரேமா சுதாரித்துக் கொண்டு தடுத்துள்ளார். ேமாட்டர் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர், ஹெலன்மேரி பிரேமாவின் கையில் கிடந்த 2 பவுன் பிரேசிலெடை பறித்துள்ளார். உடனே, அவர் திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கம் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ேபாலீஸ் தேடுகிறது
பின்னர், ஹெலன் மேரி பிரேமா இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2 நகையை பறித்து சென்ற மர்ம வாலிபர்ளை போலீசார் தேடி வருகிறார்கள்.