(செய்திசிதறல்)பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு
திருச்சியில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணிடம் செல்போன் பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணிடம் செல்போன் பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
திருச்சி கோப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுவாதிகா (24). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுவாதிகாவிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.500 பறிப்பு
* ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த நாகம்மாள் (70) என்பவர் காவிரி நகர் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் நாகம்மாளிடம் ரூ.500 பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் அரவிந்த்குமாரை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
* திருச்சி ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (36). இவர் எடமலைப்பட்டிபுதூர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (35) இவர் கொட்டப்பட்டு மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்றதாக கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.
* திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்த முத்தலிப் (53), நூர் மீரான் (49) ஆகியோர் அதே பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்த தியகராஜன் (33), பெரியமிளகுபாறை பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக செசன்ஸ் கோர்ட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மாடு செத்தது
*துவரங்குறிச்சி-மணப்பாறை பிரிவு சாலை அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து கீரனூர் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று திடீரென்று குறுக்கே ஓடியது. இதில் காரில் அடிப்பட்டு மாடு செத்தது. இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
*சோமரசம்பேட்டை புது தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் சகாயராஜ். இவரது மகன் இலமெண்ட்ரோசரியா (வயது 23). சிறுவயது முதல் வலிப்பு நோயால் அவதி அடைந்து வந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு தலைவலியும் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.