கோழி இறைச்சி சாப்பிட்ட பெண் திடீர் சாவு
கோழி இறைச்சி சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார்.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இதில் மேற்கு வங்காளம் மாநிலம் ஹரம்பூர் பகுதியை சேர்ந்த கோனிகா (வயது 19) என்ற இளம்பெண்ணும் பணியாற்றி வந்தார்.சம்பவத்தன்று இவர் கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆனால் ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குசிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின் தனது அறைக்கு திரும்பிய கோனிகாவுக்கு நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை சரியில்லாததால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கே.சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் கொடுத்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.