தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் காதலனை கரம்பிடித்தார்
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் காதலனை கரம்பிடித்தார்
திருச்சி
முசிறியை அடுத்த மணப்பாளையம் ஆமூரை சேர்ந்த ராமர் மகள் ரஞ்சனி (வயது 19). பி.ஏ. 2-ம் ஆண்டு மாணவியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான வீரமலை மகன் செம்பருத்தி (25) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த ரஞ்சனி விஷம் குடித்தார். முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் திடீரென மாயமானார். இதனிடையே அவர் பெரிய கொடுந்துறை கொண்டன்சாரு பிள்ளையார் கோவிலில் செம்பருத்தியை திருமணம் செய்து கொண்டார். தங்களை பிரித்து விடுவார்கள் என அஞ்சிய காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு முசிறி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்து ரஞ்சனியை காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story