34 ஆண்டுகளாக நடமாடும் நூலகம் நடத்தி வரும் பெண்
மயிலாடுதுறையில் 34 ஆண்டுகளாக நடமாடும் நூலகம் நடத்தி வரும் பெண் 58 வயதிலும் மாதம் 1,000 கி.மீ்ட்டா் சைக்கிளில் பயணிக்கிறார்
மயிலாடுதுறை திருவிழந்தூர் கவரத்தெருவை சேர்ந்தவர் கிருபராஜன். இவருடைய மனைவி வத்சலா(வயது58). இவர் கடந்த 1989-ம் ஆண்டு தனது 24-வது வயதில் வாடகை சைக்கிளில் நூல்களை எடுத்து கொண்டு வீடு வீடாகக் சென்று கொடுத்து நடமாடும் நூலகத்தை தொடங்கி சிறிது, சிறிதாக சம்பாதிக்க தொடங்கினார். தற்போது 58 வயதாகும் இவர் சராசரியாக மாதம் 1000 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து வீடுகளுக்கு சென்று பெண்கள் படிக்கும் நூல்களை கொடுத்து இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொள்கிறார். வத்சலாவுக்கு சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் சிறந்த பெண் உழைப்பாளிக்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், ராமராஜ், வர்த்தக சங்கத் தலைவர் செல்வம் ஆகியோர் விருது வழங்கினர். இதுகுறித்து வத்சலா கூறுகையில், இன்றைய தலைமுறையினரின் கவனம் சமூக ஊடகங்கள் பக்கம் திரும்பி விட்டது. இதனால் எனக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இருப்பினும் குறைந்த வாடிக்கையாளர்களை கொண்டு மனநிறைவுடன் நடமாடும் நூலகம் நடத்தி வருகிறேன் என்றார்.