கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும்வென்றான் அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி செல்வராதா (வயது 59). இவர் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். எப்போதும் வென்றானில் இருந்து சிவஞானபுரத்திற்கு தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர். 7 கண்பாலம் அருகே சென்ற போது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று செல்வராதா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Related Tags :
Next Story