பெண் தொழிலாளியை கரடி துரத்தியதால் பரபரப்பு


பெண் தொழிலாளியை கரடி துரத்தியதால் பரபரப்பு
x

கோத்தகிரியில் பெண் தொழிலாளியை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் நூர் மேரி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை ரைப்பிள் ரேஞ்ச் வழியாக நடந்து சென்றார். அங்குள்ள புதர் மறைவில் இருந்து வெளியே வந்த கரடி நூர் மேரியை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தார். மேலும் அவர் மயங்கி கீழே விழுந்தார். நுர் மேரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கரடியை விரட்டினர். பின்னர் நுர் மேரியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் கரடி பெண் தொழிலாளியை துரத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story