மலேசியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டு தர வேண்டும்
மலேசியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டு தர வேண்டும் என கலெக்டரிடம் பெண் கோரிக்கை விடுத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த சோது குடி கிராமத்தை சேர்ந்த உமாதேவி தன்னுடைய குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சிவகங்கை வந்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:- என்னுடைய கணவர் பாண்டி, மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலையில் அங்கிருந்து தொலைபேசி மூலம் பேசிய ஒருவர் என்னுடைய கணவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story