சுமைதூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


சுமைதூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

திண்டுக்கல்லில் சுமைதூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணமூர்த்தி (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story