வாங்காத கடனுக்கு பணம் கேட்டு மிரட்டியதால் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை


வாங்காத கடனுக்கு பணம் கேட்டு மிரட்டியதால் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
x

ஜோலார்பேட்டை அருகே வாங்காத கடனுக்கு, பணத்த ைகேட்டு மிரட்டியதால் தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவதற்கு முன் வீடியோவில்பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

ரெயிலில் அடிபட்டு சாவு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அடியத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் திருப்பதி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தாமலேரி முத்தூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரெயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் திருப்பதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும், இறப்பதற்கு முன்பு சமூக வலைதளங்களில் இவர் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

வாங்காத பணத்துக்கு...

அதில் பெரிய முக்கனூர் பகுதியை சேர்ந்த கணவன்- மனைவி, அக்ரகாரம் ஊசிக்கல் மேடு பகுதியை சேர்ந்த கணவன்- மனைவி, அவர்களது மகன் ஆகியோரிடம் ரூ.85 ஆயிரம் பணம் வாங்கியதாகவும், என்னை மின்சார அலுவலகத்தில் வேலை செய்கிறார் என கூறி அவர்களிடம் ஒருவர் பணத்தை வாங்கினார். இந்த பணத்தை நான்தான் வாங்கினேன் என மிரட்டி பணத்தை கொடுக்குமாறு உளைச்சலுக்கு ஆளாக்கி வந்ததாார். எனக்கு ரூ.1½ லட்சத்தில் காரும், மூன்று அடுக்கு வீடும் உள்ளது என்று ஒருவர் கூறி அடிக்கடி கடன் வாங்கியுள்ளார். ஆனால் நான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை.

எனக்கு சாவதற்கு பயமாக உள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் இருவரையும் அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இறந்தாலும் நான் பணம் வாங்கவில்லை என்ற உண்மை ஊர் மக்களுக்கு தெரியட்டும். எனவே 5 பேரையும் அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

5 பேரிடம் விசாரணை

இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானர். அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில், இரண்டு தனிப்படை அமைத்து நேற்று 5 பேரையும் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். வாங்காத கடனுக்காக கட்டிட தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story