கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி
கிணற்றில் தொழிலாளி பிணம் கிடந்தது.
ஆம்பூர்
கிணற்றில் தொழிலாளி பிணம் கிடந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சி காட்டு வெங்கடாபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர், ஆம்பூரை அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி கோபால் (வயது 60) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபால் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.