மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருவட்டாரை அடுத்த இட்டகவேலி சுண்டக்காலவிளை பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 45), கூலி தொழிலாளி கூலித்தொழிலாளியான இவருக்கு உஷா (43) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உண்டு. வில்சன் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் திருவட்டாரில் இருந்து அரமன்னம் செல்லும் போது இட்டகவேலி தொட்டிப்பாலம் அருகில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழும்பவில்லை. அதன்பிறகு தான் அவர் இறந்தது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வில்சனின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வில்சனின் மனைவி உஷா திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story