காயத்துடன் சுற்றித்திரியும் சிறுத்தை


காயத்துடன் சுற்றித்திரியும் சிறுத்தை
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காயத்துடன் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகிறது. இந்தநிலையில் குன்னூர் அருகே அருவங்காடு பாலாஜி நகர் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று நடமாடியது. சிறுத்தை காலில் காயத்துடன் நடந்து செல்லும் காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் அதே சிறுத்தை காயத்துடன் உலா வருவது தெரியவந்தது. இது வன உயிரின ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக காலில் காயத்துடன் சுற்றி வரும் சிறுத்தையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.


Next Story