வாலிபருக்கு ஓராண்டு ஜெயில்


வாலிபருக்கு ஓராண்டு ஜெயில்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது

தென்காசி

தென்காசி மாவட்டம் வேட்டரம்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவருடைய மகன் அழகு கணேசன் (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சொக்கம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அழகு கணேசனுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.



Next Story