கொக்கு மருந்து சாப்பிட்ட இளம்பெண் சாவு


கொக்கு மருந்து சாப்பிட்ட இளம்பெண் சாவு
x

ஆற்காடு அருகே கொக்கு மருந்து சாப்பிட்ட இளம்பெண் இறந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த லாடவரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகிரி. இவரது மகள் பூஜா (வயது 20). இவர், நேற்று முன்தினம் இரவு கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story