விருதுநகரில் கொரோனாவுக்கு இளம்பெண் சாவு


விருதுநகரில் கொரோனாவுக்கு இளம்பெண் சாவு
x

விருதுநகரில் கொரோனாவுக்கு இளம்பெண் பலியானார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், அதற்கான பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதியானது. சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அந்த பெண்ணின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. அவர் பரிதாபமாக இறந்தார். கொரோனா வார்டில் பெண் இறந்தது பற்றி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணி கூறுகையில், "உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்புடன் மூளைக்காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழக்க நேர்ந்தது" என்றார்.


Related Tags :
Next Story