இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

இளம்பெண் மாயமானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 50). விவசாயி. இவருக்கு 3 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். அதே பகுதியில் பால் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்த பால் சென்ட்ரலில் அவரது மகள் தமிழரசி(18) வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பால் கடைக்கு சென்றவர் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு வரவில்லை. அருகில் உள்ள இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழரசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான தமிழரசியை தேடி வருகின்றனர்.


Next Story