பழனி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பழனி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்
பழனி அருகே உள்ள கோதைமங்கலம் கொத்தனார் காலனியை சேர்ந்தவர் சிவக்கண்ணன். அவருடைய மனைவி காயத்ரி (வயது 24). கடந்த சில நாட்களாக இவரது வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காயத்ரி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயத்ரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளேயாவதால், பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story