வேடசந்தூரில் 108 ஆம்புலன்ஸ், பஸ்களை மறித்து வாலிபர் ரகளை


வேடசந்தூரில் 108 ஆம்புலன்ஸ், பஸ்களை மறித்து வாலிபர் ரகளை
x
தினத்தந்தி 22 April 2023 2:00 AM IST (Updated: 22 April 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் 108 ஆம்புலன்ஸ், பஸ்களை மறித்து ரகளை செய்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் பஸ் நிலையம் முன்பு வடமதுரை சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அந்த சாலையில் வாலிபர் ஒருவர் தள்ளாடியபடி அங்கும், இங்குமாக நடந்து வந்தார். பஸ் நிலையம் முன்பு வந்ததும் அவர், சாலையில் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம், பஸ், மில் வேன்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார். அதேபோல் இருசக்கர வாகனங்களில் வந்த சிலரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அவர் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த கடைக்காரர்கள், பயணிகளிடம் ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பஸ் நிலையத்துக்கு வந்த போலீசாரிடம், ரகளை செய்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர், வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 19) என்பதும், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story