நிலக்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
நிலக்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்
நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தில் உள்ள மயானத்தில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்துகிடந்தார். அவரது அருகில் விஷமருந்து பாட்டில் கிடந்தது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், துள்ளுப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் (வயது 35) என்பதும், விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story