பெரியகுளத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் வாலிபருக்கு சிறை


பெரியகுளத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் வாலிபருக்கு சிறை
x
தினத்தந்தி 24 Aug 2023 2:30 AM IST (Updated: 24 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் வாலிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி

பெரியகுளத்தில் கடந்த 2011-ம் ஆண்டு கஞ்சா கடத்தல் தடுப்பு தொடர்பாக போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா கடத்தியதாக கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ராஜசேகர் (21), பாண்டி மகன் சிலம்பரசன் (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜசேகர் இறந்து விட்டார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி ஹரிஹரக்குமார் நேற்று தீர்ப்பு கூறினார். கஞ்சா கடத்திய சிலம்பரசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


Next Story