ரெயிலில் பாய்ந்து இளம் பெண் தற்கொலை முயற்சி?
ரெயிலில் பாய்ந்து இளம் பெண் தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது.
விருதுநகர்
சிவகாசி,
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணிக்கு திருத்தங்கல் ரெயில் நிலையம் வந்தது. பின்னர் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி ரெயில் செல்ல முயன்றது. அப்போது ரெயில் பாதையில் ஒரு இளம் பெண் நடந்து வருவதை ரெயில் டிரைவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ெரயிலை உடனே நிறுத்தினார். ெரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் ெரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ரெயில் பாதையில் நடந்து வந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 30 வயது கொண்ட அந்த பெண் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர் கூறினர். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story