ஆண் நண்பருடன் ஆற்றில் குளித்த இளம்பெண்; கணவர் தாக்கியதால் பரபரப்பு
நெல்லையில் ஆண் நண்பருடன் ஆற்றில் குளித்த இளம்பெண்ணை கணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி
நெல்லையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினார். இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பலர் பார்த்தனர்.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story