திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை


திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை
x

திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

பனமரத்துப்பட்டி பேரூராட்சி நல்லியாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). டாஸ்மாக் குடோனில் பெட்டி தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (22). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இனியவன்விஜய் (3), ஜானுஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஆறுமுகம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளுடன் பிரியா இருந்துள்ளார். இதனிடையே மதியம் ஒரு மணியளவில் அக்கம்பக்கத்தினர் பிரியாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு பிரியா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் பிரியா தற்கொலை செய்து கொண்டதால் சேலம் உதவி கலெக்டரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Next Story